இராமா! எழிலான இராமா! கருணைக் கடலே! பங்கயற்கண்ணா! புவிமகள் கேள்வா! ஒளிரும், தியாகராசன் ஆகியோரால் போற்றப் பெற்றோனே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ஜய/ ராம/ ஸ்1ரு2ங்கா3ர/ ராம/
ஸ்ரீ ராமா/ பல்லாண்டு/ இராமா/ எழிலான/ இராமா/
சரணம்
சரணம் 1
கா3ரவமுன/ ப்3ரோவு/ கருணா/ ஸமுத்3ர/ (ஸ்ரீ)
அன்புடன்/ காப்பாய்/ கருணை/ கடலே/
சரணம் 2
நா/ லோனி/ ஜாலி/ நீகு/-ஏல/ தோசது
3ரா/ (ஸ்ரீ)
எனது/ உள்ள/ துயர்/ உனக்கு/ ஏன்/ தோன்றாதய்யா/
சரணம் 3
மனஸு/-இச்சி/ நாதோனு/ மாடாடு
3னதி
3/-எபுடு
3/ (ஸ்ரீ)
மனம்/ திறந்து/ என்னோடு/ பேசுவது/ எப்போது/
சரணம் 4
தாளனு/-ஈ/ வேள/-இக/ ஜாலமா/ ராம/ (ஸ்ரீ)
தாளேன்/ இந்த/ வேளை/ இன்னும்/ தாமதமா/ இராமா/
சரணம் 5
ப
3லிமினி/ வலசிதே/ சலமா/ ஓ ராம/ (ஸ்ரீ)
ஆழ/ காதலித்தாலும்/ தயக்கமோ/ ஓ இராமா/
சரணம் 6
ஈ/ ஸௌக்
2யமு/-ஈ/ பா
4க்
3யமு/-எந்தை
3ன/ க
3லதா
3/ (ஸ்ரீ)
இந்த/ இன்பமும்/, இந்த/ பேறும்/ எங்காவது/ உண்டா/
சரணம் 7
ஜபமு/-ஏமோ/ தபமு/-ஏமோ/ அபராத
4மு/-ஏமோ/ (ஸ்ரீ)
செபம்/ என்னவோ/ தவம்/ என்னவோ/ குற்றம்/ என்னவோ/
சரணம் 8
பங்கஜ/ நயன/ நா/ குங்கும/ நீவே/ (ஸ்ரீ)
பங்கய/ கண்ணா/ எனது/ குங்குமம்/ நீயே/
சரணம் 9
அவனிஜா/-அதி
4ப/ நா/ ஸொக
3ஸு/-எவரிதே
3/ ராம/ (ஸ்ரீ)
புவிமகள்/ கேள்வா/ எனது/ சொகுசு/ எவருடையதே/ இராமா/
சரணம் 10
நீவு/ நிமிஷமு/ லேனி/ பா
4வுகமு/-ஏலே/ (ஸ்ரீ)
நீ/ நிமிடமும்/ இல்லாத/ பேறு/ ஏனோ?
சரணம் 11
தோஷிம்பக/-என்னாள்ளு. தோசுனே/ ராம/ (ஸ்ரீ)
மகிழ்விக்க/ எப்போது/ தோன்றும்/ இராமா/
சரணம் 12
எல்ல/ ஸௌக்
2யமுலு/ மனஸு/-ஒல்லதே
3/ ராம/ (ஸ்ரீ)
எந்த/ இன்பத்தையும்/ மனது/ விரும்பாதே/ இராமா/
சரணம் 13
பாயகா
3/ மேனு/ ஸக
3மாயெனே/ ராம/ (ஸ்ரீ)
பிரிந்ததனால்/ மேனி/ பகுதியானதே/ இராமா/
சரணம் 14
ஈ/-அந்த
3மு/-ஈ/ சந்த
3மு/-எந்தை
3ன/ க
3லதா
3/ (ஸ்ரீ)
இந்த/ எழில்/ இந்த/ செம்மை/ எங்காகிலும்/ உண்டா?
சரணம் 15
கூர்சு/ வெதலு/-ஆர்சு/ கட
3 தேர்சவே/ ராம/ (ஸ்ரீ)
இணைவாய்/ துயர்/ தீர்ப்பாய்/ கடைத் தேற்றுவாய்/ இராமா/
சரணம் 16
மிக்கிலி/ ம்ரொக்கி/ சே/ ஜிக்கிதி/ ராம/ (ஸ்ரீ)
மிக்கு/ தொழுது/ கையில்/ சிக்கினேன்/ இராமா/
சரணம் 17
ராஜில்லு/ ஸ்ரீ த்யாக
3ராஜ/-ஆதி
3/ வினுத/ (ஸ்ரீ)
ஒளிரும்/ ஸ்ரீ தியாகராசன்/ ஆகியோரால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மாடாடு3னதெ3புடு3 - மாடாடே3தெ3புடு3
3 - குங்கும - குங்குமமு
5 - ஸக3மாயெனே - ஸக3மாயெனோ : 'ஸக3மாயெனே' - சரியாகும்
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் என்ற நாடகத்தில் பிரகலாதன் பாடுவதாக அமைந்துள்ளது.
2 - ஜபமேமோ தபமேமோ அபராத4மேமோ - ஜெபமென்னவோ? தவமென்னவோ? - இவை அறியேன் என - மிகவும் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த சரணத்திற்கு, சரியான பொருள் கூறுதல் கடினம். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதற்கு பொருள் எழுதியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
3 - குங்கும - எனது குங்குமம் - சுமங்கலியின் சின்னம் - இப்பாடல் நாயகி பாவத்தில் (இறைவன் நாயகனாக) அமைந்துள்ளது. ஒரு சுமங்கலிப் பெண்ணுக்கு, குங்குமம் மிகவும் முக்கியமான ஆபரணப் பொருளாகும்.
4 - தோஷிம்பகென்னாள்ளு தோசுனே - மகிழ்விக்க எப்போது தோன்றும் - இதற்குப்பின் வரும் 15-வது சரணத்தில் பிரகலாதன் (தியாகராஜர்) இறைவனைத் தன்னுடன் இணைய வேண்டுகின்றார். 12-வது சரணத்தில் உலக இன்பங்களை எனது மனம் விரும்பாது என்கின்றார். இவையிரண்டினையும் இணைத்து நோக்குகையில், இறைவன் தன்னை மகிழ்விக்க பிரகலாதன் (தியாகராஜர்) விழைவது தெரிகின்றது. அதன்படி பொருள் கொள்ளப்பட்டது.
Top