பல்லவி
பலுகு கண்ட3 சக்கெரனு கேருனே 1பணதுலார ஜூட3ரே
அனுபல்லவி
கொலுவு கூடமுனனு கொலுசு வாரினி
பிலிசி தா3ஸ1ரதி2 ப்ரேம மீர 2பலிகே (பலுகு)
சரணம்
ஸுருல காமினீ மணுல கா3ன-
மாத3ரணனாலகிஞ்சுசுனு 3ஸ்1ரு2ங்கா3ர
ரஸ யுக்த 4வார ரமணுலாட3 ஜூசி
ஸரஸ 5த்யாக3ராஜுனிதோனு 6பொக3டே3 (பலுகு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பலுகு/ கண்ட3/ சக்கெரனு/ கேருனே/ பணதுலார/ ஜூட3ரே/
சொற்கள்/ கண்ட/ சருக்கரையை/ பழிக்குமே/ வனிதையரே/ காணீர்/
அனுபல்லவி
கொலுவு/ கூடமுனனு/ கொலுசு வாரினி/
கொலுவு/ கூடத்தினில்/ சேவிப்போரை/
பிலிசி/ தா3ஸ1ரதி2/ ப்ரேம/ மீர/ பலிகே/ (பலுகு)
அழைத்து/ தாசரதி/ பரிவு/ மிக/ பகரும்/ சொற்கள்...
சரணம்
ஸுருல/ காமினீ/ மணுல/ கா3னமு/-
வானோர்/ பெண்/ மணிகளின்/ இசையை/
ஆத3ரணனு/-ஆலகிஞ்சுசுனு/ ஸ்1ரு2ங்கா3ர/
கனிவுடன்/ செவிமடுத்துக்கொண்டு/ சிங்கார/
ரஸ/ யுக்த/ வார/ ரமணுலு/-ஆட3/ ஜூசி/
சுவை/ யுடை/ ஆடல்/ மகளிர்/ ஆட/ கண்டு/
ஸரஸ/ த்யாக3ராஜுனிதோனு/ பொக3டே3/ (பலுகு)
இனிமையாக/ தியாகராசனுடன்/ புகழ்ந்துரைக்கும்/ சொற்கள்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பணதுலார - புத்தகங்களில், இச்சொல்லுக்கு 'பெண்கள்' என்றும் 'தோழிகள்' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கு அகராதியில் 'பணதி' என்ற சொல்லுக்கு அப்படிப்பட்ட பொருளில்லை.
இவ்விடத்தில், 'பெண்கள்' என்ற பொருள் பொருந்தும். எனவே, எதுகை மோனையை நினைவிற்கொண்டு நோக்குகையில், 'ப'-வில் தொடங்கும் 'பெண்' என்ற பொருளுடைய சொல் தேவைப்படும். தெலுங்கில், 'பட3தி', 'பொலதி' மற்றும் 'படு3சு' என்ற சொற்கள் காணப்படுகின்றன. இவற்றினில் 'பட3தி' என்ற சொல்லினின்று 'பட3துலார' என்ற சொல் பொருந்தலாம்.
2 - பலிகே - பலுகு : இவ்விடத்தினில் 'பலிகே' பொருந்தும்.
5 - த்யாக3ராஜுனிதோனு - த்யாக3ராஜ நுதுனிதோனு : 'த்யாக3ராஜ நுதுனிதோனு' என்ற சொல்லுக்கு 'தியாகராஜனால் போற்றப் பெற்றவனுடன்' (அதாவது ராமன்) என்று பொருளாகும். அதன்படி, 'ராமன் தனக்குத்தானே பேசிக்கொள்கின்றான்' என்று பொருளாகும். இங்கு 'ராமன், தியாகராஜனுடன் பகர்வதாக'த்தான் பொருள் கொள்ளவேண்டும். எனவே, 'த்யாக3ராஜ நுதுனிதோனு' தவறாகும்.
6 - பொக3டே3 - பொக3டு3
Top
மேற்கோள்கள்
3 - ஸ்1ரு2ங்கா3ர ரஸ - நவ ரசங்களில் முதன்மையான சிங்கார ரசம். நவ ரசங்களாவன - சிங்காரம், வீரம், வெறுப்பு, சினம், நகைச்சுவை, அச்சம், கருணை, வியப்பு, அமைதி. சில இடங்களில் 'வாத்ஸல்யம்' எனப்படும் 'பெற்றோரின் பரிவும்' இப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
4 - வார ரமணுலு - தேவதாசிகள் எனப்படும் ஆடல் மகளிர்.
Top
விளக்கம்
இப்பபாடல் நாயகி பா4வத்தில் அமைந்துள்ளது.
கண்டசருக்கரை - கற்கண்டெனவும் கொள்ளலாம்
தாசரதி - தசரதன் மைந்தன் - இராமன்
Top